Connect with us
 

News

துணிவு டிரைலர் சாதனையை முறியடிக்க வரும் வாரிசு டிரைலர் !

Published

on

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அறிவித்துள்ளது படக்குழு.

இன்று இப்படத்தின் சென்சார் வேலைகள் நடந்து முடிந்து வாரிசு படத்துக்கு ‘யு’ சான்றிதல் வழங்கியது தணிக்கைக்குழு. மேலும் இப்படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் விதமாக உள்ளதாம்.

பொங்களுக்கு வரும் இப்படத்துடன் அஜித் நடித்துள்ள துணிவு படமும் மோதவுள்ளது சில தினங்களுக்கு முன்னர் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி 40 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாளை வெளியாகும் வாரிசு படத்தின் டிரைலர் துணிவு படத்தின் டிரைலர் சாதனைகளை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

இதுவரையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர்தான் தமிழ் சினிமாவில் அதிகம் பார்வையாளர்களை பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது சுமார் 60 மில்லியன்ஸ் பார்வையாளர்களை இது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.