Connect with us
 

News

அனல் பறக்கும் அதிரடி பஞ்ச் வசனங்களுடன் வாரிசு டிரைலர் வெளியானது !

Published

on

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. பொங்கள் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாலை வெளியானது. இந்த டிரைலரில் குடும்ப உறவுகள், அடிதடி சண்டை, காதல், பஞ்ச் வசனங்கள் என அனைத்தும் கலந்து இருந்தது.

தொழில் அதிபர் சரத்குமாரின் மூன்றாவது மகன் விஜய். போட்டி தொழில் அதிபராக வரும் பிரகாஷ்ராஜ் மூலம் அவர்களுக்கு தொல்லை வருவதும் அதை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதையாக இருக்கும் என டிரைலரின் மூலம் இதுதான் கதை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

விஜய்யின் சண்டை காட்சிகள் அனல் பறக்கும் வகையில் உள்ளன. எல்லா ‘எல்லா இடமும் நம்ம இடம்தான்’ பவர் சீட்ல இருக்காது அதுல வந்து ஒருவன் உட்காருறான்ல அவன் கிட்டதான் இருக்கும், நம்ம பவர் அந்த ரகம், அன்பே அடியோ எனக்கு கொடுக்கனும்னா கொஞ்சம் யோசித்து கொடுக்கனும். ஏன்னு சொல்லு நீ எதை கொடுத்தாலும் நான் டிரிப்பிளா கொடுப்பன். கிரவுண்ட் மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம். ஆனால் ஆடியன்ஸ் ஒருத்தன் மட்டும்தான் பார்ப்பாங்க. ஆட்ட நாயகன் நான்தான் என்று தளபதி விஜய் பேசும் பல மாஸ் பஞ்ச் வசனங்கள் அந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது.

ராஷ்மிகாவுடன் விஜய்யின் நடனம், யோகிபாபுவுடன் நகைச்சுவை காட்சிகளும் அந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.