Connect with us
 

Reviews

Raajavamsam Movie Review

Published

on

ரு மிகப்பெரிய குடும்பத்தில் இருக்கும் சசிகுமார் சென்னையில் வேலைக்காக வசிக்கிறார். ஜ.டி துறையில் பணிபுரிந்து வரும் சசிகுமாருக்கு மிகப்பெரிய ப்ராஜக்ட் கொடுக்கப்படுகிறது. இது சசிகுமாரின் கனவு ப்ராஜகட் என்பதான் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

Movie Details

இது ஒரு புறம் இருக்க சசிகுமாருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்க்கிறது அவரது குடும்பம். தனது கனவு ப்ராஜக்டா இல்லை குடும்பத்தினரின் விருப்பத்துக்கு திருமணா என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு சசிகுமார் தள்ளப்படுகிறார். இறுதியில் இவரின் கனவு ப்ராஜக்ட் பணிகளை வெற்றிகரமாக முடித்தார இல்லை திருமணம் செய்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக வரும் சசிகுமார் வழக்கம் போல தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார். சண்டக்காட்சிகளில் சும்ம மிரட்டியுள்ளார்.காதல், குடும்பம், நட்பு என மூன்றிலும் அசத்தியுள்ளார் சசிகுமார்.

நாயகியாக வரும் நிக்கி கல்ராணி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்துள்ளார். அழுத்தமான காட்சிகள் எதும் படத்தில் இல்லையென்றாலுமிவரின் சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதிலும் ஒரு காட்சியில் பசு கன்று ஈனும் காட்சியில் உணர்ச்சிவசப்படும் இடத்தில் நிக்கி கல்ராணி ஆழமான சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.

படத்தில் நகைச்சுவைக்காக யோகி பாபு, சதீஷ், சிங்கம் புலி, மனோபாலா என பலர் இருந்தும் காமெடி என்பது படத்தில் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்களும் திரைக்கதைக்கு பலமான நடிப்பு.

விவசாயம் ஜ.டி சம்மந்தப்பட்ட கதையை கையில் எடுத்துக்கொண்ட இயக்குநர் கதிர் வேலு அதை கூட்டுக்குடும்பம் காமெடி என அழகாக திரைக்கதை அமைத்து அதற்காக சரியான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து திறமையாக அவர்களை கையாண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

கூட்டுக் குடும்பத்தின் நன்மைகளைச் சொல்வது குறித்து கதையினை நகர்த்துவதா…? நகைச்சுவை சினிமாவாக இதனை எடுத்துச் செல்வதா…? என பல கோணங்களில் சிந்தித்து இயக்குநர் ஒரு கலவையாக செய்திருக்கிறார்
Cinetimee

படத்தில் குறிப்பாக சில வசனங்கள் நம்மை கவனிக்க வைக்கிறது அதில் ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்த உறவுகளைத்தான் கண்கள் தேடும்.

மற்றும் யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போன்ற குடும்ப உறவுகளை சொல்லும் சில வசனங்கள் படத்தின் பலம்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணை இசையிலும் அசத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் சித்தார்த் கிராமத்து அழகை கொஞ்சம் கூட மாறாமல் அழகாக காட்டியுள்ளார்.


மொத்தத்தில் ராஜவம்சம் குடும்பமாக சேர்ந்து சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.