Connect with us
 

Tamil News

பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் வரவிருக்கும் அதிரடி-அரசியல்-திரில்லர் ‘புரவி’

Published

on

பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக S.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் பெண்களை மையமாகக் கொண்டு வரவிருக்கும் அதிரடி-அரசியல்-திரில்லர் ‘புரவி’ திரைப்படத்தின் துவக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

‘களிறு’ திரைப்படத்தை தொடர்ந்து, இன்றைய சமூகத்தில், வேகத்திற்கு இணையாக விவேகம் முன்னெடுக்கப்படாத நிலையில், பெண்களுக்கு எதிரான அநீதிகளும், குற்றங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஒரு
பெண்ணின் பார்வையில் இந்த நிகழ்வுகளை, கிரைம்-அரசியல்-திரில்லர் என ஒரு அதிரடி திரைப்படத்தை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில், படைக்கவிருக்கிறார் இயக்குனர் சத்யா.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி நடிக்க, அவரோடு இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், ஃபர்ஷத் நடிக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார்.
பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார். நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.

ஆடைகள் வடிவமைப்பு பூர்ணிமா டி ஆர், உடைகள் நடராஜ், ஒப்பனை கார்த்திக் ஹரி, டிசைன்ஸ் ரெட் டாட் பவன் என தேர்ந்தெடுத்த தொழிநுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.