Connect with us
 

News

4 நாட்களில் ரூ.50 கோடி வசூலை குவித்த அயலான் !

Published

on

நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான்.
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோ தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனாலும் குடும்பங்களுக்கும், குழந்தைகளும் பிடித்தமான திரைப்படம் இது என பல விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க ஆரம்பித்து உள்ளது.
 
இந்த நிலையில் அயலான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் அயலான் வெளியாகி 4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாரத்துக்கு இப்படம் ரூ.100 கோடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.