Connect with us
 

News

புஷ்பா திரைப்படத்தை பாராட்டிய உலக நாயகன் கமல் ஹாசன் !

Published

on

தெலுங்கு பட இயக்குநர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா.

நேரடி தெலுங்கு படமான புஷ்பா தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் இப்படம் வெளியானாலும் கடந்த வாடம் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியான பின்னரே திரைப்பிரபலங்கள் பலர் பார்த்திவிட்டு இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துள்ளார்.இந்த நிலையில் இது பற்றி புஷ்பா படத்தின் இசையமைப்பாளார் தேவி ஶ்ரீ பிரசாத் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அன்புள்ள கமல்ஹாசன் உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி புஷ்பா திரைப்படம் பார்த்தற்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரின் பணிகள் குறித்து பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா திரைப்படம் பார்த்தகு நன்றி கமல்ஹாசன் இதை நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.இப்படத்தின் இரண்டாம் விரைவில் உருவாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.