Connect with us
 

News

கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என நினைத்தேன் – கயல் ஆனந்தி !

Published

on

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். இதில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் நாயகி காயல் ஆனந்தி  “மங்கை படத்தின் டிரைலர் வெளியீட்டில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் பரவசத்துடனும் இருக்கிறேன். குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல் தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன்.

இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம். இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார், தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும் போதே அழகாக இருக்கும்.

துஷி கார் ஓட்டிக் கொண்டே அழகாக நடித்திருக்கிறார். ராதிகா மாஸ்டர் உடனான போர்ஷன் கலகலப்பாக இருந்தது. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி. மிகச் சிறந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பிரஸ் அண்ட் மீடியா நீங்கள் எப்போதும் நல்ல படங்களுக்கு வரவேற்பு கொடுப்பீர்கள். இப்படத்திற்கும் அந்த வரவேற்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”