Connect with us
 

News

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணையும் தமன்னா !

Published

on

பீஸ்ட் படத்தை தொடர்ந்து Rajinikanth நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் நெல்சன்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் கிடைத்த தகவலின் படி கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதும் உறுதியானது. மேலும் ஜஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோரும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை தமன்னா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாதம் 15-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.