Connect with us
 

News

வாரிசு படத்தின் அம்மா பாடல் வெளியானது !

Published

on

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது.

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் சரத்குமார், குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், ஶ்ரீகாந்த் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

பொங்கள் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார். வாரிசு படத்தின் ரஞ்சிதமே 99 மில்லியன் பார்வையாளர்களையும் இரண்டாவது பாடலான தீ தளபதி 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான அம்மா பாடலை இன்று வெளியிட்டது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலை பிரபல பாடகி சித்ரா பாடியுள்ளார். விஜய் படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல் வெளியாகியுள்ளது இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.