Connect with us
 

News

வேட்டையன் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் வெளியானது சந்திரமுகி 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

Published

on

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு மற்றும் பலர் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ்டன், கங்கனா ரணவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிக்க நன்றி வேட்டையன் முதல் உங்களுக்காக வெளியிடுகிறோம் உங்களின் ஆசீர்வாதம் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர் படக்குழு.