Connect with us
 

News

லாரன்ஸ் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் மரணம் !

Published

on

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் அற்புதம். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அற்புதன். இப்படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், தெலுங்கு படமான செப்பவே சிறுகாளி ஆகிய படங்களை இயக்கினார். அது மட்டுமில்லாமல் யோகி பாபு அடுத்து நடிக்கும் படத்தை இயக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மறைந்த அற்புதனுக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு வயது 53 என்பது குறிப்படத்தக்கது.