Connect with us
 

News

வெளிநாடுகளில் ரூ.200 கோடி வசூல் செய்த லியோ !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி  விழா கடந்த 1 ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில், விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் விவிஐபிக்கள் கலந்து கொண்டனர்.

ஒரு வாரத்தில் மிகப்பெரிய வசூல் குவித்து சாதனை படைத்த நிலையில், இப்படம் இதுவரை ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் விரைவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  விஜய்யின் லியோ படம் வெளி நாடுகளில் ரூ. 201 கோடி வசூல் குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.