Connect with us
 

Teaser

Single Shankarum Smartphone Simranum – Official Teaser !

Published

on

மிர்ச்சி சிவா நடித்திருக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் நடித்திருக்கிறார்கள்.

சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் மாகாபா ஆனந்த், பக்ஸ், ஷாரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கேபிஒய் பாலா, ‘மைக்செட்’ அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஃபேன்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் பிரம்மாண்டமாக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி.துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன இயக்குeர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி போனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேர்பை பெற்று வருகிறது.