Connect with us
 

News

ஜஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருவதை விட கதையின் நாயகியாக வலம் வருவதை விரும்பும் சில நடிகைகளில் ஜஸ்வர்யா ராஜேஷ் ஒருவர். தன் கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்துள்ள தமிழ் நடிகை.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வத்திக்குச்சி பட இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் டிரைவர் ஜமுனா திரைப்படம் டிசம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.