Connect with us
 

News

ஜஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் நமிஷா விஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் கிரேட் இந்தியன் கிச்சன்.
தற்போது இப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.

புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் படும் கஷ்டங்களை கூறும் கதைதான் இப்படத்தின் கதை. இப்படத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். கணவராக பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.