Connect with us
 

Trailer

குறட்டையும் அதனால் வரும் சிக்கலும் குட் நைட் டிரைலர் !

Published

on

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் நைட். இன்று இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இரண்டும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

விநாயகர் சந்திரசேகரன் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிரைலரில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் கொண்டவர் நாயகன் மணிகண்டன். இதை எப்படி தன் வாழ்நாள் முழுவதும் சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் முழுக்கதையும் இதை ஜாலியான குடும்ப திரைப்படமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் என்பது நமக்கு இந்த டிரைலர் மூலம் தெரிகிறது. இதை தவிரை அந்த குறட்டையை நிறுத்த மணிகண்டன் எடுக்கும் சில முயற்சிகள், இந்த குறட்டையால் இவரின் காதல் கல்யாண வாழ்க்கையில் என்ன பிரச்சனை எல்லாம் வருகிறது என்பதை காமெடியுடன் சொல்லி இருக்கிறார்கள்.

இப்படம் மே 12 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.