Connect with us
 

News

டிசம்பரில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் ரிபெல் !

Published

on

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் ஜி.வி.பிரகாஷ் அவர்களும் ஒருவர். என்னதான் ஹீரோவாக ஆனாலும் இசையமைப்பதை விடவில்லை தற்போது உள்ள முன்னணி நடிகர்களின் படத்துக்கு இசை அமைத்துக்கொண்டுதான் இருக்கிறார். சூர்யா நடுக்கவிருக்கும் புதிய படத்துக்கு இவர்தான் இசை அமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் அவரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரிபெல். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கியுள்ளார். இப்பாட்டை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முழுக்க ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் என இடம்பெற்றுள்ளது இந்த டீசரில். தற்போது இப்படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் டிசம்பர் 15 அல்லது 21-ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிடுள்ளது.