Connect with us
 

Trailer

தெறிக்கும் ஆக்ஷன் அதிரடியுடன் குட்டி கதையுடன் வெளியான லியோ டிரைலர் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தை சிதறடித்து வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அக்டோபர் 19-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டிரைலரில் அதிரடி ஆக்ஷனை விட வசனம் அதிகமாகவே இருந்தது. அதிலும் தளபதி விஜய் பேசும் வசனங்களே அதிகமாக இடம்பெற்றுள்ளது. சுமார் 2 நிமிடம் 43 செகன்ட் ஒடும் இந்த டிரைலரில் விஜய் பேசும் கெட்ட வார்த்தையும் அடங்கும்.

தளபதி ரசிகர்களுக்கான அந்த ஆக்ஷன் காட்சிகள் கண்டிப்பாக நாடி நரம்பை சிதற வைத்திருக்கும். விஜய்யின் கொலை வெறி சண்டையில் ஆரம்பித்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் என அனைவரும் மிரட்டலான லுக்கில் வந்து செல்கிறார்கள்.