Connect with us
 

News

லியோ படத்தின் நா ரெடிதான் வரவா பாடலுக்கு நடனம் ஆடிய ஷிகர் தவான் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ‘ நா ரெடி’ என்ற பாடல் விஜய் பிறந்த நாள் அன்று வெளியானது. விஜய் குரலில் இப்பாடல் வெளியானது வைசாக் இப்பாடலை எழுதியிருந்தார். இப்பாடல் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்பாடல் வெளியான நாள் முதல் சினிமா நட்சத்திரங்கள் முதல் விளையாட்டு நட்சத்திரங்கள் என அனைவருமே ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியீட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் நா ரெடிதான் வரவா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.