Connect with us
 

Teaser

Mohandas – Official Teaser !

Published

on

தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக சில தினங்களுக்கு முன் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான திரைப்படம் FIR. இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த FIR திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவிலும் ரிலீசாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் விஷ்ணு விஷாலின் அடுத்த படமான மோகன்தாஸ் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், பிக்பாஸ் ஷாரிக், கருணாகரன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.